ஸ்ரீ குருகுஹ வைபவம்

 

 
 ்ரீ தீக்ஷிதேந்த்ராளான ஸ்ரீ முத்து ஸ்வாமி தீக்ஷிதர் பராஸக்தியின் மீதியற்றிய கீர்த்தனைகள் அநேகம்!! அதிலும் ஸ்ரீ வித்யா பரமான அநேக ரஹஸ்யங்களை தமது கீர்த்தனைகளில் குழைத்து கொடுப்பதில் தீக்ஷிதருக்கு நிகர் தீக்ஷிதர் தான்!!  

காஞ்சி காமாக்ஷி, மாயூரம் அபயப்ரதாம்பாள், திருவாரூர் கமலாம்பாள், திருவையாறு தர்மஸம்வர்தினி, கும்பகோணம் மங்களாம்பாள் என  அநேக தேவீக்ஷேத்ரங்கள் மீதும் கீர்த்தனைகள் இயற்றினாலும் மதுரை ஸ்ரீ மீனாக்ஷி பராபட்டாரிகை மீது ஆஸ்ர்யமான கீர்த்தனைகள் ஸ்ரீ வித்யா ரஸத்தோடு கொடுத்துள்ளார்!!

ஸ்ரீ அபயாம்பா, ஸ்ரீ கமலாம்பா நவாவரண கீர்த்தனைகள் போன்றே  மீனாக்ஷி பரதேவதைக்கும் ஸ்ரீ ச்யாமக்ருஷ்ண ஸாஸ்த்ரீகள் இயற்றிய  ஸ்ரீ "மீனாக்ஷி நவரத்ன மாலிகை" எனும் நவகீர்த்தனைகளும்!!  தீக்ஷிதரியற்றிய விபக்தி கீர்த்தனைகள் அநேகம் உண்டு!!

எல்ல க்ஷேத்ரத்திலும் பராஸக்தி பரமஸாநித்யத்துடன் விளங்கினாலும் இந்த ஹாலாஸ்ய க்ஷேத்ரமெனும் மதுரையில் தான் அவள் ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு ஸக்தியாக ப்ரஹாஸிக்கிறாள்!!  அப்படி தீக்ஷிதர் அவளையே மஹோட்யாணபீடேஸ்வரீயான காமாக்ஷியாக ரஹஸ்யமாக வர்ணிக்கும் கீர்த்தனை இது!!  

ஸ்ரீ மது4ரா புரி விஹாரிணி - ராக3ம் பி3லஹரி - தாளம் ரூபகம்

பல்லவி

ஸ்ரீ மது4ரா புரி விஹாரிணி
ஸ்ரீ ராஜ மாதங்கி3 மாம் பாஹி

மதுராபுரியெனும் நித்யமும் வேதகோஷம் ஒலிக்கும் மாமதுரை மாநகரை ஸ்தானமாக கொண்டு விளங்குபவளே என் தாயே!!   

ஓ!! ராஜமாதங்கேச்வரீ!!தாயே!! பவரோஹத்திலிருந்து என்னை நீயேரக்ஷிக்க வேணும்!!

தேவீ இங்கு ஸ்ரீ சக்ரபீடத்தின் மீது ப்ரத்யக்ஷமாய் ராஜராஜேச்வரீயாய் மஹா த்ரிபுரஸுந்தரீயாய் ப்ரஹாஸிக்க அத்துனை கீர்த்தனைகளிலும் மீனாக்ஷி "ச்யாமளை" என்று வர்ணிக்கப்படும் ரஹஸ்யமாவது!!   

ஸ்ரீ மீனாக்ஷி பரதேவதையை சுற்றி அஷ்டதிக்கிலும் அஷ்ட மீனாக்ஷி க்ஷேத்ரங்களுண்டு!! ஸுக ச்யாமளை, வாக்வாதினி, வேணு ச்யாமளா, வீணா ச்யாமளா, ஹஸந்தி ச்யாமளா, ஸாரிகா ச்யாமளா, நகுலீ வாகிஸ்வரீ, சண்ட மாதங்கி என அஷ்டமாதங்கிகள் சூழ மத்யத்தில் இவள் க்ஷேத்ரம் கொண்டிருப்பதால் இவளே ராஜச்யாமளையாம்!!  

த்ரைலோக்ய மோஹன சக்ரம் முதல் ஒவ்வொரு சக்ரத்தில் ஒவ்வொரு  ச்யாமளையும் ஸர்வாநந்தமயத்தில் மஹா ச்யாமளையாக ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி லலிதா மஹா த்ரிபுரஸுந்தரீயாக மீனாக்ஷி ஹாலாஸ்ய க்ஷேத்ரத்தில் மஹா ஸம்புநாதரால் உபாஸிக்கப்படுகிறாள் என்பதும் ரஹஸ்யமாம்!!   

அனுபல்லவி

பாமர ஜன பாலினி காம த3ஹன மோஹினி

 பாமர ஜனங்களை ரக்ஷிப்பவளும்!! மன்மதனை தஹனம் செய்த பரமேச்வரனையே மோஹிக்க செய்பவளும்!!  

(மத்4யம கால ஸாஹித்யம்)

நாம ரூப விமர்ஸி1னி நடேஸ்1வரி ஜக3ஜ்ஜனனி

நாமரூப விவர்ஜிதையும்!! நடேஸ்வரியானவளும்!! ஜகத்தினை ஈன்றவளும்!!  

 ( பொதுவாக ஈச்வரரின் இடப்பாகம் தேவீயின் பாகமாதலால் நாட்யமாடும் குஞ்ஜிதபாதமானது தேவீயின் பாதமென்பது ஞானியரின் கருத்து!! ஆனால் மதுரையிலோ ஸ்வாமி வலக்காலை தூக்கி நாட்யமாடும் நிலையில்  இங்காவது நாம் ஸ்வயாமாக தேவீயின் பலமில்லாதே நாட்யமாடுவதால் "நடேஸ்வரன்"  என்ற நாமம் தமக்கு என்ற பரமசிவனாரின் எண்ணத்தை நிராகரிக்கும் வகையில் தேவீ இந்த க்ஷேத்ரத்தில் ஸ்வாமியின் வலப்பாகத்தை ஸ்தானமாக கொண்டுள்ளதால் இங்கும் இவளே "நடேஸ்வரீ!!"   

சரணம்

பாண்ட்3ய ராஜ பூஜிதாப்3ஜ பத3 யுக3ளே
ஓட்3யாண பீட2 ஸ்தி2த ஸகல கலே

பாண்ட்ய ராஜனான மலயத்வஜன் முதல் ஸோமஸுந்தர பாண்டியனான பரமேஸ்வர பாண்டியர் வரை பாண்ட்ய ராஜகுலத்தால் நித்தமும் பூஜிக்கப்படும் பாதத்தையுடையவளும்!!  

மஹோட்யாண பீடாதிஷ்டாத்ரியுமான ஸ்ரீ காஞ்சி காமாக்ஷியும் இவளே!! (காமாக்ஷி காஞ்சிதார்த்தா, ஓட்யாண பீட நிலையா -- ஸ்ரீ மீனாக்ஷி ஸஹஸ்ரநாமம்)  

(மத்4யம கால ஸாஹித்யம்)

பாடலீ குஸும ப்ரியே
பத்3ம ராக3 ஸம ப்ரபே4
ஸோம ஸுந்த3ரேஸ்1வர ப்ரியே
கு3ரு கு3ஹ ஸமுத்3ப4வே

பாடலீ குஸுமத்தில் ப்ரியமுள்ளவளும்!!  பத்ம ராக கற்களை போல ஒளிர்ந்து மினுமினுக்கும் தேஹகாந்தியை கொண்டவளும்!! "பத்மராகம்" எனும் ராகத்தின் மீது ப்ரியமுடையவளும்!!  

ஸோமஸுந்தர மஹா காமேஸ்வரர் மீது ப்ரியம் கொண்டவளும்!!  குருகுஹனின் தாயான ஸ்ரீ மீனாக்ஷி பட்டாரிகையையே பஜிக்கிறேன்!!

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم