சிவலிங்கத்தை இப்படி வழிபாடு செய்தாலே போதும்

 

சிவலிங்கத்தை இப்படி வழிபாடு செய்தாலே போதும்.!
 
வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும்
மூன்று லோகத்திற்கும் அதிபதியான அந்த ஈசனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும், எந்தெந்த பொருளில் லிங்கத்தை பிடித்து வைத்து, சிவபெருமானிடம் மனமுருகி வேண்டுதலை வைத்தால், எந்தெந்த கஷ்டங்கள் எப்படி தீரும் என்பதை பற்றிய சில அரிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டிலிருந்தபடியே சுலபமான முறையில் லிங்க வழிபாட்டை, இந்த முறைப்படி மேற்கொண்டாலே போதும். நம் வாழ்க்கையில் செல்வ கடாட்சத்தை பெற்று, மன நிறைவோடு வாழலாம். சிவபெருமான் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது நந்திதேவர்.
சிவபெருமான் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவதற்கு முன்பாக, நந்திதேவரை நாம் வழிபட வேண்டும். நந்திதேவரிடம் நம் கோரிக்கைகளை சொல்லி விட்டாலே போதும். அந்த கோரிக்கைகள் அந்த வேண்டுதல்கள் சிவபெருமான் செவிகளுக்கு நேரடியாக சென்று விடும். கோவிலுக்குள் நுழைந்தவுடன் நந்திதேவரைத் தரிசனம் செய்து, நந்திதேவருக்கு 2 நெய் அகல் தீபங்களை ஏற்றிவைத்து, வில்வ இலைகளை மாலையாக அணிவித்து, ‘சிவபெருமானிடம், என் குறைகளை கொண்டு செல்லவேண்டும்’ என்று பக்தியோடு வேண்டிக் கொண்டு உங்களுடைய கஷ்டங்களை நந்திதேவரிடம் கூறுங்கள். நந்திதேவரின் காதுகளில் உங்களுடைய வேண்டுதலை சொல்லிவிட்டு, அதன் பின்பு சிவபெருமானை தரிசனம் செய்ய நந்தி தேவரிடம் அனுமதி பெற்று கொண்டு, சன்னிதானத்திற்குள் நுழைய வேண்டும். இதுவே சரியான முறை.
தொடர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாட்களில் நந்திதேவரிடம், மேல் சொன்ன படி உங்களுடைய கஷ்டங்களை கூறிக் கொண்டே வாருங்கள். ஒரே கோரிக்கையாக இருக்க வேண்டும். அந்த கோரிக்கை நிச்சயமாக கூடிய விரைவிலேயே நிறைவேறிவிடும். சரி, வீட்டிலேயே சிவலிங்கத்தை எந்தெந்த பொருட்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தால், என்னென்ன பலன்களை நம்மால் பெறமுடியும். அதையும் பார்த்து விடுவோமா?
சாஸ்திரத்தில் சிவலிங்கத்தை 16 வகையான பொருட்களை கொண்டு லிங்கம் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. புற்று மண் லிங்கம், ஆற்றுமணல் லிங்கம், பச்சரிசி லிங்கம், அன்ன லிங்கம், சாணத்தில் லிங்கம், வெண்ணெய் லிங்கம், விபூதி லிங்கம், சந்தன லிங்கம், சர்க்கரை லிங்கம், தயிர் லிங்கம், பழவகைகளின் லிங்கம், ருத்ராட்ச லிங்கம், தர்ப்பை லிங்கம் தண்ணீரில் லிங்கம் என்று பல வகைகளில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யலாம்.
இதில் நம்முடைய வீட்டிலேயே சுலபமான எந்த லிங்கங்களை நம் கையாலேயே பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம்? அன்ன லிங்கம், சாதத்தை வைத்து நம் வீட்டிலேயே லிங்கம் பிடித்து வழிபாடு செய்தால், வீட்டில் சாப்பாட்டிற்கும் தன தானியத்திற்க்கும் என்றுமே பஞ்சம் வராது.
பசும் சாணத்தால் லிங்கத்தை பிடித்து வழிபாடு செய்து வந்தால் தீராத வியாதி கூட சீக்கிரமே விலகும். வெண்ணையில் லிங்கம் செய்து வழிபாடு செய்தால், வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அந்த வெண்ணையை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பிரசாதமாக எடுத்துக் கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று விபூதியால் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால், வீட்டில் என்றைக்கும் வறுமை இருக்காது. மகாலட்சுமி கடாட்சம் வீட்டில் நிலைத்திருக்கும். சந்தன லிங்கம் நம்முடைய வாழ்க்கையில் எல்லா வளத்தையும் பெற்றுத்தரும். வெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்ற பொருட்களில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தால் வாழ்வு
இனிமையாக
ும்.
தீய குணங்கள் நம்மை விட்டு அகல கெட்டி பசுந்தயிரில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யலாம். இப்படியாக உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, மனதார எம்பெருமானை வேண்டிக் கொண்டால், வேண்டிய வரத்தை உடனே பெற்றுவிடலாம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.
பிறவாமை அருளும்
#பிரதோஷ நாயகா
போற்றி போற்றி.......🙏
ஓம் சிவாய நமஹ
சிவ சிவாய நமஹ.....🙏

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم