அதிசய சிவன் கோவில்கள்

 

அதிசய சிவன் கோவில்கள்
 
பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது.இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம்.இங்கு இறைவன் #பஞ்சவர்ணேஸ்வரர்’என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
 
ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்த போது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம்.இங்கு சிவபெருமான் #ரத்தினகிரீஸ்வரர்’என்ற பெயருடன் காட்சி தருகிறார்.
 
💥கரூர் #பசுபதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் வலது புறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.
 
💥அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம்.இங்கு இறைவன் #விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
 
💥காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக் கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.
 
💥ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்’டில் காமகோடீஸ்வரர் கோவிலில் காணலாம்.
ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் #பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.
 
💥பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் சிவகங்கா என்கிற கிராமம்.அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார்.ஐந்து அடி உயர,நல்ல பருமனான லிங்கம்.சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம்.
#கவிகங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர்.ஆச்சரியம் என்னவென்றால்!அந்த கோவிலில் நெய்,அபிஷேகத்துக்கு விற்கிறார்கள்.அதை வாங்கி,அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால்,அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார்.அந்த நெய் வெண்ணையாக மாறி இருக்கும்.எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.
 
💥தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய #அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.
💥தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம்.இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது.சுவாமியின் பெயர் #பிலாச வனேஸ்வரர்.
💥வேலூர் கோட்டை கோவிலிலும் மூன்று கால்களுடன் #ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.
 
💥மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திபருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம்.வலது மேல் கரத்தில், மழுவும்,இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார்.இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
 
💥ஈரோடு ஜில்லாவில்,காங்கேயத்துக்கு அருகில்,மடவிளாகம் சிவன் கோவில் குளத்தில்,பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம்.அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம்.மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.
 
💥சித்தநாத் ஆஸ்ரமத்தில் உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் நிறுவப்பட்டுள்ளது.பாதரசத்தை சுத்தப்படுத்தி கட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம்.உண்மையில் இது சித்தர்களுக்கு கை வந்த கலை.சித்த மார்கத்தில் செல்பவர்களுக்கு,இந்த லிங்க தரிசனம்,அதன் அருகாமை மிக நல்ல பலன்களை தருகிறது.இந்த ஆஸ்ரமம் புனே,மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.
 
💥கேரளா மாநிலம்,திருச்சூரில் இருக்கும் வடக்குநாதர் சிவன் கோவிலில் எத்தனையோ தலை முறையாக,வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர,அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது.உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும்.எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும்,வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை.இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது.உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்த வித வியாதியையும் மாற்றுகிற அருமருந்தாக திகழ்கிறது.ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.
 
💥காசி #விஸ்வநாதர் கோவிலில் சாயங்கால பூஜையின் போது நூற்றி எட்டு “வில்வ” இலைகளால்,தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள்.இதில் விசேஷம் என்ன வென்றால்,அந்த நூற்றி எட்டு “வில்வ” இலைகளிலும் சந்தனத்தால் “ராமா”என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள்.
 
அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தும் செயல்.
💥கேரள மாநிலம்,திருச்சூர்–எர்ணாகுளம் பாதையிலுள்ள ஊர்‘திருக்கூர்’.இங்குள்ள சிவன் கோவிலில் ஆஸ்துமா போன்ற மூச்சுக் கோளாறு உள்ளவர்கள் நோய் குணமாக தாம்புக்கயிறு துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள்.இப்படி வழங்கப்பட்ட தாம்புக் கயிறுகள் கோவில் மண்டபத்தில் கட்டி தொங்க விடப்படுகின்றன.
 
💥மதுரையிலிருந்து சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில்,திருவேடகம் இருக்கிறது.இறைவன் #ஏடகநாதர்,மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.அனைத்து பில்லி,சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகின்றன.இங்கே எழுந்தருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி,பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள்.இங்குள்ள ஸ்தல விருட்சமான வில்வ மரம் சக்தி படைத்தது.இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது.இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.
 
💥மதுரை நகருக்குள் செல்லூரில் இருக்கிறது,திரு ஆப்பனூர் கோவில்.இறைவன் பெயர் திரு #ஆப்புடையார்.இறைவி குரவங்கமழ் குழலி.சம்பந்தர் பாடிய இத்தலத்திற்கு வந்தால்,வாத நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது.
 
💥சிவகங்கை,திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது.தனது குறைகளை போக்க வேண்டி இறைவி இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம்.அதனால் திங்கட் கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது.மணப்பேறு கிட்டவும் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பயனடைகின்றனர்.இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும் இரு மரகத லிங்கங்கள் வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.
 
🙏🏯ௐ நமசிவாய🏯🙏
🙏🔥#அன்பே #சிவம்🔥🙏

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post