எளிதில் எதிர் மறை சக்திகளை விரட்டி பரவெளியை புனிதப்படுத்தலாம்

 

இப்போது மிக அரிதான இரண்டு வகை சங்குகளை பற்றிய விவரங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்காக கொடுக்கிறேன். இவற்றை தற்போது (புதிதாக கிடைப்பவைகளை) விற்க கூடாது எனவும் (அபூர்வ பொருள் என்பதால்) சட்டம் உள்ளது.
ராக்கெட் சங்கு : இது ராக்கெட் போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்த பெயர். மேலும் இது தான் இருக்கும் இடத்தை அந்த ராக்கெட் போல மிக உயர்ந்த இடத்துக்கு இட்டு செல்லும் என்பது கண்கூடு-அதனாலும் அந்த பெயர் வந்திருக்கலாம். முக்கியமாக வட மாநிலத்தில் பெரிய வியாபாரிகள் அனைவர் இடத்திலும் இந்த சங்கானது இருக்கும்.இது வியாபாரத்தை பல உச்ச கட்ட நிலைக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி- கிடைத்த பத்து நாட்களில் என்னாலும் உணர முடிந்தது !! தற்போது இவை கடலில் இருந்து புதிதாக எடுக்கப்பட்டால் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமாம் !! எம்மிடம் கொடுக்க பட்டவை நாள் பட்டவை !! (புதிதாக எடுக்கப்படும் சங்கு மிகுந்த நாற்றம் மற்றும் வழவழப்பு உடையதாக இருக்கும்-அதை தான் சுத்தம் செய்து பின்பு விற்கிறார்கள் )
மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் கோமுகி சங்கு : அடுத்த அபூர்வம்-மாட்டின் முகத்தை போல் இருக்கும்
கோமுகி சங்கு !! இது இருக்கும் இடம் காமதேனு இருக்கும் இடத்திற்கு சமமானது !! மஹாலக்ஷ்மி இதில் வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம் !! மேலும் சுக்கிரன் மற்றும் குரு அருள் கூடும் இது இருக்கும் இடத்தில் !! ஒரு வம்சத்தில் இருக்கும் அனைத்து குடும்பம் / தலைமுறைகளுக்கும் முன்னேற்றமே இல்லாத நிலைமை இருப்பின் அதை மாற்றும் சக்தி உடையது இந்த சங்கு !! (வழிபட்டு வந்தால் மட்டுமே-வரவேற்பரையில் வைத்தால் பலன் இல்லை) மேலும் தொடர்ந்து வரும் தடைகள் மற்றும் அதிர்ஷ்டம் இல்லாத நிலையையும் மாற்றும் சக்தி உடையது !! துரதிர்ஷ்ட வசமாக இதுவும் தற்போது கிடைப்பதில்லை !!
இது போன்று பல சங்குகள் உள்ளன. முக்கியமாக மேற்கண்டவற்றில் ஓங்கார நாதம் எப்போதும் ஒலித்து உரைகின்றன !! வேத மந்திர சக்திகளை கிரகித்து தர கூடிய சக்திகள் உடையவை உண்மையான சங்குகள் !! இவற்றை இல்லத்தில்-வியாபார தளத்தில் வைத்திருப்பதால் எளிதில் எதிர் மறை சக்திகளை விரட்டி பரவெளியை புனிதப்படுத்தலாம் !!

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم