*மெளனம் பழகு*
எங்கே எல்லாம்
உனது உண்மைகுணம்
முதலில் உதாசீனப்
படுத்தப்படுகிறதோ
அங்கேயெல்லாம் -
*மெளனம் பழகு*
நன்கு பழகி உறவாடியதில்
யார் உன்னை
வெறுத்து ஒதுக்கினாலும்
அவர்களைப் பற்றி
ஒன்றுமே பேசாதிருக்க-
*மெளனம் பழகு*
ஊரறிய செய்தது குற்றம் எனப்
புரிந்து கொண்டும்
புரியாதது போல்
இருப்பவரிடம் -
*மெளனம் பழகு*
பிறருக்கு உன்மூலம்
செய்த சிறு நன்றியையும்
எச்சூழ்நிலையிலும்
சொல்லிக்காட்டாமல் இருக்க -
*மௌனம் பழகு*
அடுத்த நொடி வாழ
வழியில்லாமல் போகும்
நிலைவரினும் ,
எல்லாம் இருந்தும்
மனமுவந்து கொடுக்கும்
மனநிலை இல்லாதவரிடம்
உதவி கேட்டிட -
*மெளனம் பழகு*
நன்கு உண்மையாய்
பழகியிருந்தும்
பின்னாளில்
உண்மையை மறைத்துப்
பொய்யாகப் பேசுபவரிடம்
ஏனென்று கேட்காமல்
இருக்க -
*மெளனம் பழகு*
அன்பை விதைத்திட
*மெளனம் பழகு*
அன்பைப் பெற்றிட
*மெளனம் பழகு*
அகிம்சையை வளர்த்திட
*மெளனம் பழகு*
إرسال تعليق