💥 ஆதி இனம் தமிழினத்தின் #பண்பாட்டுப் #பாரம்பரிய #நடனங்கள்👌
💥 தமிழர்களின் பாரம்பரிய நடனங்கள்! இது எல்லாம் இன்னும் நம் பாரம்பரிய வழக்கத்தில் நடைமுறையில் இருக்கிறது!!
💥 காவடி.
துதிக்கும் பக்தர்களால் முறைப்படி அழகாக வில் வடிவில் அமைக்கப்பட்ட ஒருவகை பொருளாகும். இதனை தலையில் சுமந்து ஆடும் ஆட்டமே காவடி எனப்படுகின்றது
💥 தப்பாட்டம்
தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது மற்றும் எழுச்சி மிகுந்தது
💥 மயில் ஆட்டம்
இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். இது தமிழரின் நாட்டார் ஆடற் கலையாகும்.
💥 தேவராட்டம்,.
தலைப்பில் தலைப்பா கட்டி, இடுப்பில்துண்டு கட்டி ஆடுவர். உருமி மேளம், பறை மேளம் ஆகியவை தேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைகளாக இருக்கின்றன. ஒரு சில சமூகத்தினரின் கோவில் விழாக்களிலும், வீட்டுவிழாக்களிலும் இந்த நடனம் இல்லாமல் இருப்பதில்லை. இதை ஒருசடங்காகவே வைத்திருக்கின்றனர்.
💥 கரகாட்டம்.
தலையில் பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை வைத்தபடி, சமநிலை பேணிஆடும் இது பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்றாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
💥 பொய்க்கால் குதிரை ஆட்டம்.
குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். கால்களில் உயரமான தடிகளைக் கட்டிக் கொண்டும் ஆடப்படிகின்றது.
💥 பரத நாட்டியம்.
இன்று பரத நாட்டியம் என அழைக்கப்பட்டாலும் ஆரம்பக்காலங்களில் சதிராட்டம் என்றே அழைக்கப்பட்டது.
தெருக்கூத்து.
இது தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்று ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும்
💥 உறுமி மேளம்.
நம்முடைய நாட்டுப்புற கலைகளில் முக்கிய வாத்தியம் இந்த உறுமி மேளம். விலங்குகள் உறுமுவதைப் போன்று ஒலியை எழுப்பக் கூடிய இசைக்கருவி என்பதால் உறுமி என்று பெயர் வந்திருக்கலாம்.
💥 புலி ஆட்டம்.
புலி போன்று வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலிபோல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர்.
💥 கும்மியாட்டம்:
கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நடனக் கலை ஆகும். பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தம் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழக்கில் உள்ளது. குரவை என்ற கலையில் இருந்து, கும்மி பிறந்ததாகக் கூறப்படுகிறது.
💥கோலாட்டம்:
கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும்.ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இக் கலை நிகழ்த்தப்படுகிறது. கையில் கழிகளை வைத்தாடும் நாட்டார் கலை வடிவங்கள் நிறைய உண்டு. அவற்றில் கோலாட்டம் தனிச்சிறப்புப் பெற்ற ஒன்று. பல்வேறு பகுதிகளில் சமயச்சடங்காகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இக்கலையைத் திருமணமாகாத ஆண்கள் மட்டுமே நிகழ்த்தினர். இப்போது பெண்கள் பெரும்பான்மையாக இக்கலையில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் தென் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும் உச்சத்தில் முடிவுறும். இதற்கென தனி அடவுகளும் உண்டு. இக்கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் "தாண்டியா" என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது. கோலாட்டத்தைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை ஆசான் என்பார்கள். ஆசான் இறந்து போனால் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது மாணவர்கள் கோலாட்டம் நிகழ்த்தியபடி செல்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
அவனருளாலே
எல்லாம் சிவன் செயல்
சர்வத்தையும் படைத்த
சிற்றம்பல நாதனே!
சர்வத்திலும் நிறைந்தாய்,
சர்வமும் விழைந்தே;
அர்ப்பணிக்கு முள்ளத்தில்,
அரியாசனம் கொண்டே
முற்பிறவி வினையறுக்கு,
முடிவிலா சோதியனே
திருச்சிற்றம்பலம்
அவனருளாலே👐🏻
சிவமே தவம்.....
தவமே சிவம்.....
திருச்சிற்றம்பலம்
முப்பொழுதும்... நற்றுணையாவது நமசிவாயவே
إرسال تعليق