இந்தியா ஏன் இந்துநாடாக இருக்க வேண்டும் என்பதும், ஏன் வட எல்லை எப்பொழுதும் வலுவானதாக இருக்க வேண்டும்

 


திருச்சி திருவரங்கத்தில் பங்குனி திருவிழா நடைபெற்று முடிந்தது, இப்பொழுது மிக உற்சாகமாகவும் பாதுகாப்பாகவு நடக்கும் அவ்விழாவின் பின்னால் மிகபெரிய சோகம் ஒளிந்திருக்கின்றது

இந்தியா ஏன் இந்துநாடாக இருக்க வேண்டும் என்பதும், ஏன் வட எல்லை எப்பொழுதும் வலுவானதாக இருக்க வேண்டும் எனும் தேவை அதில்தான் இருக்கின்றது

ஆம் அது 1323ம் ஆண்டு

முன்பு மாலிக்காபூர் வந்து மதுரையினை சூறையாடிவிட்டு டெல்லி சென்றதற்கு பின்னரான‌ காலங்கள், ஆராயிரம் யானை நிறையவும் 20000 குதிரையிலும் அவன் கொள்ளை பொருட்களை கொண்டு சென்ற காலத்திற்கு பின்னரான காலம்

அவன் காலத்துக்கு பின் டெல்லியில் கில்ஜி வம்சம் முடிந்து துக்ளக் வம்சம் ஆட்சிக்கு வந்திருந்தது,  அந்த பிரசித்தி பெற்ற காமெடி மற்றும் கொடூர வில்லனான முகமது பின் துக்ளக் ஆண்ட காலம்

ஆம் கியாசுதீன் துக்ளக் மகனே உலூக் கான், அந்த உலூக்கானின் இன்னொரு பெயர்தான் முகமது பின் துக்ளக்

துக்ளக்கின் ஆட்சியில் தென்னகம் தன்னை பல நாடுகளாக சுதந்திரபடுத்தின , காகதீயர் ஹோசாலர்களெல்லாம் தங்களை தனிநாடாக்கியபொழுது பாண்டிய நாடும் தனி நாடாயிற்று

அதை அடக்கி மறுபடி ஆள படையெடுத்து வந்தான் துக்ளக், தமிழகத்தில் அவன் அப்படி நுழையும் பொழுதுதான் திருச்சியில் பங்குனி உத்திரம் விழா நடந்து கொண்டிருந்தது

சோமநாதபுரத்தில் கஜினி பாய்ந்தது போல் பாய்ந்தான் துக்ளக், அவனின் கொடூரம் உச்சமாய் இருந்தது

ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஸ்ரீரங்கம் கோவிலையும் பாழ்படுத்தின இவனது படைகள், ஆம் இந்து கோவிலெகளெல்லாம் புதையலும் தங்கமும் வைரமும் நிரம்பியவை என்பது ஆப்கானியர் கண்ட உண்மை, இந்திய இந்து கோவிலெல்லாம் அவர்களால் இடிபட்டதெல்லாம் அதனாலே

அதுவும் மூலவர் சிலைகள் தங்கமாக இருக்கலாம் இல்லை சிலையின் கீழ்  நவரத்ன புதையல் இருக்கலாம் என்பதால் கொள்ளையடிக்கபட்டன‌

திருவரங்கம் கதறியது,  நம்பெருமானை எடுத்துக் கொண்டு கோவிலிலிருந்து தப்பிய ஆச்சார்யார்கள் தென்னகத்தின் பல பகுதிகளுக்கும் அவரை எடுத்துச் சென்றதையும் அதில் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் வைணவ குரு பரம்பரை சரித்திரம் சொல்லுகிறது.

" திருவரங்கன் உலா" என எழுதபட்ட நாவல் அந்த கண்ணீர் கதையினை சொல்கின்றது

அத்தோடு விட்டானா துக்ளக்?

அவன் மதுரைக்கு பாய்ந்தான், துக்ளக் வருகின்றான் என்றதுமே மதுரை அலறிற்று அதோடு திருவரங்கம் கோவிலில் அவன் செய்த அட்டகாசத்தை கேள்விபட்ட கோவில் குருக்கள் கலங்கினர்

அப்பொழுது ஆண்ட பராக்கிரம பாண்டியன் மாலிக்காபூரின் அழிவுக்கு பின் கொஞ்சம் மதுரையினை சீர்படுத்தினார் ஆனால் துக்ளக்கின் முரட்டு தனத்தை யோசித்தார்

இதனால் பதுங்கி பாயும் திட்டத்துடன் காளையார் கோவில் பக்கம் ஒதுங்கினார், ஆலயம் காவல் இல்லா இடமானது

மதுரை கோவில் குருக்கள் அவசரமாக பல காரியங்களை செய்தனர்சொக்கநாதர் சன்னதி கருவறையின் வாயிலில் ஒரு சுவரை எழுப்பி மூடி. அதன் முன் ஒரு கிளிக்கூண்டையும் வைத்தனர்.  

சன்னதியின் முன் ஒரு லிங்கத்தை வைத்துவிட்டு,  மீனாட்சி அம்மையை கோவில்  விமானத்தில் அஷ்டபந்தனம் செய்து மறைத்து வைத்தனர். இளையனார் போன்ற உற்சவ மூர்த்திகளை பூமிக்கடியில் மறைத்துவைத்துவிட்டு,  சுவாமி,  அம்மன் விக்கிரகங்களுடன் நாஞ்சில் நாட்டில் தலைமறைவானார்கள்.

ஆம் நாஞ்சில் நாடு எனும் சேரநாட்டு பகுதி அவர்களுக்கு ஆதரவளித்தது, மலைநாடு உள்ளிட்ட பல பகுதிகளால் ஆப்கானியர் அங்கு நுழையவில்லை அல்லது நுழைய விரும்பவில்லை

இதை தாண்டி ஏதோ பெரும் சக்தி அவர்களை காத்தும் நின்றது அது உண்மை

எதிர்த்து தடுக்க  யாரும் இல்லாமல் மதுரையில் நுழைந்த உலூக் கான், நகரை சூறையாடி கோவிலின் பல பகுதிகளுக்கும் அழிவை ஏற்படுத்தினான். அர்த்த மண்டபம், மகா மண்டபம் போன்றவை அழிக்கப்பட்டன. 

கருவறை மறைக்கபட்டிருந்ததால் தப்பிற்று

துக்ளக் முட்டாள் அல்ல, மிகுந்த புத்திசாலி. ஆலயத்தை அடித்து உடைத்து பொருள்தேடும் திட்டம் அவனுக்கு இல்லை அப்படி செய்தால் மறுபடி மக்கள் அங்கு சேர்த்து வைக்கமாட்டார்கள் என எண்ணினான்.

தேன் கூட்டில் தேன் எடுப்பது போல் மக்கள் சேர்க்க சேர்க்க கொள்ளையிட வேண்டும் அதனால் அழிவுகள் கூடாது என்பதில் கவனமாயிருந்தான்

இதனால் உள்ளூர் மக்களில் சிலருடன் ஆலய விவரம் பொன் பொருள் இருக்குமிடம் பற்றி விசாரித்து வந்து கொண்டிருந்தான்

அப்பொழுதுதான் கருவறை சுற்றி இருந்த கல்யானையினை கண்டதும் எக்காளமாய் அது என்ன என கேட்டான் துக்ளக், அது என்ன?

அது  கல்யானைக்கு சிவன் கரும்பு அளித்த திருவிளையாடல் அவனிடம் கூறபட்டது

சத்தம் போட்டு சிரித்தான் துக்ளக், கல்யானை கரும்பு தின்னுமா கொண்டு வாருங்கள் ஒரு கட்டு கரும்பை என உத்தரவிட்டான்

கரும்பு வந்தது, அதை தன் கையால் கல்யானை வாயில் கொடுத்தான்

கோச்செங்கண்ணன் கையில் இருந்த அருகம்புல்லை கல்நந்தி தின்றது போல் கரும்பை அந்த கல்யானை தின்றது

அச்சத்தில் அப்படியே உறைந்து போனான் துக்ளக், அதன் பின் ஒரு நொடியும் அவன் ஆலயத்தில் நிற்கவில்லை ஆலயம் தப்பியது

ஆலயத்தை விட்டானே தவிர தன் அரசில் மதுரையினை மாபார் என சேர்ப்பதாக இருந்தது, ஆசன் கான் என்பவனை தன் பிரதிநியாக்கிவிட்டு டெல்லி சென்றான்

ஆசன் கான் என்பவனும் அக்கோவிலில் பெரும் இடைஞ்சல் செய்யவில்லை, கொஞ்ச நாளில் ஆசன்கான் தனி அரசனாக தன்னை அறிவித்தான் பின் அவர்களுக்குள் சர்ச்சை வந்தது

அந்த குழப்பத்தில் நாயக்கர்கள் வந்து மதுரையினை பிடித்து பின் மதுரை ஆலய திருபணிகளை மேற்கொண்டனர், இன்றிருக்கும் ஆலயம் நமக்கு கிடைத்தது

அதிலும் ஒரு சிக்கல் வந்தது, ஆற்காட்டு நவாப் வெள்ளையன் துணையோடு ஆண்ட காலத்தில் மதுரையில் கான்சாகிப் எனும் மருதநாயகத்தை வைத்து ஆளும் பொழுது மீனாட்சி அம்மன் ஆலயம் அருகே மசூதி கட்ட திட்டமிட்டான்

ஆனால் அதை எதிர்த்து போராடி கோவிலை காத்தான் மருதநாயகம், நவாப் மருதநாயகம் யுத்தம் அதில்தான் தொடங்கிற்று

இன்றும் மருதநாயகம் கல்லறை மதுரையில்தான் உண்டு

திருச்சி பங்குனி உத்திர திருவிழா முடிந்து மதுரை சித்திரை திருவிழா தொடங்க இருக்கும் நேரம் இந்த வலிகள் அழிவுகளெல்லாம் நினைவுக்கு வருகின்றன‌

மாலிக்காபூர் முதல் துக்ளக் வரை மதுரை ஆலயத்துக்கு கொடுத்த அழிவுகள் கொஞ்சமல்ல, ஆனால் மாலிக்காபூரோ துக்ளக்கோ ஏன் பின்னாளைய நவாபோ எல்லோரும் மதுரை ஆலயத்தை தொட்டபின்பு அழிந்தார்கள் என்பதுதான் வரலாறு

காசி கோவிலை சுல்தானிடம் இருந்து மீட்ட குமரகுருபரர் மதுரையில் இருந்துதான் வழிபட்டு சென்றார், அன்னை மீனாட்சி அருளோடு சென்றுதான் அதை மீட்டார் எனபதும் வரலாறு

இன்றும் ஆப்கானிய மிரட்டல் தீர்ந்ததா என்றால் இல்லை, பாகிஸ்தான் எனும் பெயரில் அப்பக்கம் நிற்கத்தான் செய்கின்றது, வலிமையான பாரதமும் இந்துக்களின் மிகபெரிய ஒற்றுமையே அதை எதிர்த்து விரட்டும் வழி

படை எடுப்புக்கும் அழிவுக்கும் உலகின் எந்த வளமான பகுதியும் தப்ப முடியாது அதற்கு அன்றைய மதுரை விதிவிலக்கு அல்ல

ஆனால் அழிவுக்கு உட்பட்ட பகுதிகளிலெல்லாம் ஏன் அழிந்தோம், எப்படி அழிந்தோம், யாரால் அழிந்தோம் என  எழுதி வைத்திருப்பார்கள்

அப்படி எழுதி வைத்து வலிகளை காத்தால்தான் வம்சம் வம்சமாக அதை நினைவில் கொண்டு எதிர்காலத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் காக்க முடியும்

ஆனால் மதுரை ஆலயத்தில் அப்படி பெரும் அழிவு நிகழ்ந்த வரலாற்றை சொல்லும் விஷயம் ஏதுமில்லை

சரி ஆலயத்தில் வேண்டாம் அரண்மனையில் வைக்கலாம் அல்லவா? அதுவுமில்லை

மங்கம்மாள் அரண்மனையில் காந்தி சிரித்துகொண்டிருக்கின்றாரே அன்றி அங்கு நாயக்கர் வர காரணமான ஆப்கானியர் அழிவு பற்றி ஒரு வரி இல்லை

அரசியலில் கண்ணகி என மாணவன் பழக்கபட்டிருக்கின்றானே அன்றி ஆப்கானியர் கொடுத்த அழிவு பற்றி ஒரு வரி இல்லை

ஒரு காலம் வரும், அப்பொழுது மங்கம்மாள் மாளிகை மதுரையில் மீட்கபட்டு அந்நகரில் மாலிக்காபூரும், குரோஸ்கானும், முகமது பின் துக்ளக்கும் செய்த அட்டகாசங்கள் வரைந்து வைக்கபடும்

அது மீனாட்சி அம்மன் ஆலயம் கண்ட வலியினை சொல்லும், கல்யானை துக்ளக்கை விரட்டிய அதிசயத்தை சொல்லும்

அப்படியே திருச்சியில் இன்று அரசு அலுவலமாகிவிட்ட மங்கம்மாளின் அரண்மனை மீட்கபட்டு அதில் திருவரங்கத்தில் துக்ளக் நடத்திய வெறியாட்டத்தின் படங்கள் அடங்கிய நினைவு சின்னமாக மாற்றபடும்

ஆம் நிச்சயம் இது நடக்கும், காலமும் அது கொடுக்கும் இந்து எழுச்சியும் அதை செய்யும்

வெள்ளையனும் ஆப்கானியவாரிசுகளும் திராவிடமும் காங்கிரசும்  கூட்டாக எதை மறைத்தார்களோ அதை காலம் நிச்சயம் வெளி கொண்டுவரும் 

ஆம் அதெல்லாம் மறக்க கூடாத வலி, ஒவ்வொரு தமிழ் இந்துவும் அன்றாடம் நெஞ்சில் சுமக்க வேண்டிய வலி

அதில்தான் மதுரை , திருவரங்கம் உள்ளிட்ட பெரும் ஆலயங்களையும் காளையார் கோவில் உள்ளிட்ட ஆலயங்களையும் காக்கும் வழியும் இருகின்றது

சரி மதுரை ஆலயத்தில் மூடிவைத்த கருவறை என்னாயிற்று, எப்படி திறக்கபட்டது?

அதில்தான் இருக்கின்றது வரலாறு, ஆம் அந்த ஆசம்கானுக்கும் துக்ளக்குக்கும் முட்டி கொள்ள மதுரையில் தனி அரசனானான் ஆசம் கான், பின் அவரின் வாரிசுகளும் உறவு முறைகளும் சண்டையிட்டு ஆண்டன, 50 ஆண்டுகள் கடந்தன‌

அப்பொழுது நாயக்க அரசு தலையெடுத்தது அதன் மன்னரும், தென்னக சாணக்கியன் வித்யாகம்பரின் சீடரும் ஹரிகரனின் தம்பி மகனுமான கம்பண்ணர் காஞ்சியினை கைபற்றினார்

ஒரு நாள் காஞ்சியில் அவர் தன் மனைவி கங்காதேவியுடன் பூஜையில் இருந்த நேரம் பாண்டிய நாட்டு பெண் ஒருத்தி வாளோடு வந்தாள்

பாண்டிய நாட்டில் ஆலயமெல்லாம் சீரழிந்து கிடப்பதையும் கருவறை மூடி இருப்பதையும் சொல்லி அதை கம்பண்ணர் மீட்க வேண்டும் என கேட்டு கொண்டு ஒரு வாளையும் வழங்கினாள்

அது பாண்டியருக்கு இந்திரன் அளித்த வாள் என பெருமையாக சொன்னாள்

வாளை வாங்கினான் கம்பண்ணன், அடுத்தநொடி சிரித்தபடி மறைந்தாள் அப்ப்பெண்

ஆம் வந்தது மீனாட்சி அன்னை என உணர்ந்த கம்பண்ணன் மதுரைக்கு படையோடு வந்தான், வந்துதான் சிக்கந்தரின் ஆட்சியினை முடிவுக்கு கொண்டுவந்து மதுரையினை மீட்டு திருப்பரங்குன்றம் மலையில் அவனை  கொன்றும் போட்டார்

அதன் பின் கருவறை சுவர் இடிக்கபட்டு திறக்கபட்டது, 1378ல் அது திறக்கபட்டு அதாவது சுமார் 50 ஆண்டுகாலம் கழித்து திறக்கபட்ட பொழுது அந்த விளக்கு எரிந்து கொண்டிருந்தது, அந்த மாலை வாடாமல் இருந்தது

ஆம், அந்த அதிசயத்தை கம்பண்ணரின் மதுரை மீட்பினை சொல்லும் " மதுராவிஜயம்" சொல்கின்றது

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்  மதுராவிஜயம் நூலை எழுதியவள் கங்காதேவி அதாவது கம்பண்ணரின் மனைவி

அவள் மதுரை மீண்ட எல்லா அதிசயத்தையும் சொல்லியிருக்கின்றாள், தன் நூலில் தெளிவாக சொல்லியிருக்கின்றாள்

ஆனால் அவளையோ அவள் நூலையோ யாருக்கும் தெரியாது, ஆனால்  மதுராவிஜயம்  எனும் உண்மை நூலை தன் இஷ்டத்துக்கு மாற்றி "காவல் கோட்டம்" என புத்தகம் எழுதிய கம்யூனிஸ்ட்டும் மதுரை எம்பியுமானவரை எல்லாருக்கும் தெரியும்

மூல " மதுராவிஜயம்" புத்தகம் மறைக்கபட்டு "காவல் கோட்டம்" புத்தகத்துக்கு சாஹித்திய அகாடமி விருது என்பதெல்லாம் இங்கு இந்து வரலாற்றை குழிதோண்டி புதைக்கும் செயல் என்பதை  யார் மறுக்க முடியும்?

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم