சுந்தர காண்டம் படிக்கும் முறை

 


ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

ஸ்ரீ ராமா நின் திருவடிகளே சரணம் என்று வணங்கி பின் ஸ்ரீ ஆஞ்சனேயபிரபுவை வணங்கி சுந்தர காண்டம் படிக்கும் முறை 

கவிச்சக்கரவர்த்தி கம்பர் 10,500 பாடல்களில் ராமாயண காவியத்தை படைத்தார். பால, அயோத்தியா, ஆரண்ய, கிட்கிந்தா, சுந்தர, யுத்த காண்டங்கள் இதில் உள்ளன. அவற்றில் சுந்தர காண்டத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. கோயில் சிறப்பு மிக்கது என்றாலும், கருவறைக்கு எப்படி தனிச்சிறப்பு உண்டோ அப்படியே ராமாயணம் என்னும் கோயிலுக்கு கருவறையாக இருப்பது சுந்தர காண்டம். சிறையிருந்த சீதையும் இதற்கு ஒரு காரணம். தாயின் வயிற்றில் பத்து மாதம் வளர்ந்த பின் உலகிற்கு வரும் குழந்தை போல ராவணனால் சிறைப்படுத்தப்பட்ட சீதை அசோக வனத்தில் 10 மாதம் தவமிருந்து ராமனை அடைந்த வரலாறைச் சொல்வது சுந்தர காண்டம்.

14 படலங்கள் இதில் உள்ளன.

1. கடல் தாவு படலம்

2. ஊர் தேடு படலம்

3. காட்சிப் படலம்

4. உருக் காட்டு படலம்

5. சூடாமணிப் படலம்

6. பொழில் இறுத்த படலம்

7. கிங்கரர் வதைப் படலம்

8. சம்புமாலி வதைப் படலம்

9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்

10. அக்ககுமாரன் வதைப் படலம்

11. பாசப் படலம்

12. பிணி வீட்டு படலம்

13. இலங்கை எரியூட்டு படலம்

14. திருவடி தொழுத படலம்

ஒன்று முதல் 14 வரையுள்ள மேலே சொன்ன படலங்களை படித்தால் அளப்பரிய நன்மை ஏற்படும். கருவுற்ற பெண் சுந்தர காண்டத்தை தினமும் படிக்க அனுமனைப் போல வீரமும், ஆற்றலும் மதிநுட்பமும் மிக்க குழந்தை பிறக்கும். நோயுற்றவர்கள் படித்தால் குணமாவதோடு உடல்பலம், மனவலிமை கிடைக்கும். திருமணத்தடை, புத்திர தோஷம் உள்ளவர்கள் படித்தால் தடை நீங்கி திருமணம் கை கூடும். குழந்தைப்பேறு கிடைக்கும்.

தொடர்ந்து வரும் துன்பங்கள் விலகி இன்பமான வாழ்வு அமையும். சிறைப்பட்டது போல அடைபட்ட மனநிலையில் இருப்பவர்கள் அதில் இருந்து வெளிப்பட்டு மகிழ்ச்சி காண்பர். வாழ்வில் எந்த தேவைக்காகவும், எந்த விருப்பம் நிறைவேற வேண்டும் என்றும் சுந்தர காண்டம் படிக்கலாம். உதாரணமாக வேலை, வீடு போன்ற தனிப்பட்ட பிரார்த்தனை நிறைவேறும்.

இதற்காக தமிழ் அல்லது சமஸ்கிருத ராமாயணப் புத்தகத்தை படிக்கலாம். ஒரு நல்ல நாளில் ராமர் பட்டாபிஷேகப் படம் வைத்து அதற்கு துளசி மாலை சாத்தி விளக்கேற்றி பால், பாயாசம், வடை, பானகம் படைத்து வழிபட வேண்டும். ராமாயண புத்தகத்திற்கும் பூக்கள், சந்தனம், குங்குமிட வேண்டும். அருகில் மற்றொரு ஆசனம் அமைத்து அதற்கும் சந்தனம், குங்குமம் இட்டு வழிபட வேண்டும். சுந்தர காண்டத்தின் நாயகனான அனுமனுக்காக இந்த ஆசனம். ஏனெனில் ராமாயணம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் நேரில் எழுந்தருள்வதாக ஐதீகம். அதன் பின் படலங்களைப் படித்து தீபாராதனை செய்து வேண்டுதலை ஸ்ரீராமர் திருவடியில் வைக்க எண்ணியது ஈடேறும்.

ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படிக்க

 ராமபக்தனான அனுமனை தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.  இன்று சனிக்கிழமை பதிவு செய்துள்ளோம்

ஸ்ரீ ஆஞ்சநேயமூர்த்தியை வழிபடுகின்றோம் .

சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.

சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்

இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்

கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன

கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.

அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே

ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்

அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்

விடை கொடுத்து வழியனுப்பினரே!

வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்

வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!

மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க

மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து

சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து

சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.

இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை

இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.

அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்

இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.

கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்

சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.

ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட

வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க

கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி

சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்

அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்

கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்

பட்டாபிராமன் பெயர் சொல்ல

வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ

வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே

இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட

அனுமானும் அன்னை ஜானகியிடம்

அனுமதி பெற்றுக் கொண்டு

ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.

அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்

"கண்டேன் சீதையை என்றான்.

வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி

சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்

கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை

மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.

ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ

அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.

அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்

அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்

அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்

அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.

எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே

சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து

ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!

உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை

பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.

செல்வம் பெருக்கும் அனுமன் ஸ்லோகம்!

ஜெய பஞ்சகம்!

சுந்தர காண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன் சொன்ன ஸ்லோகத்திற்கு ஜெய பஞ்சகம் என்று பெயர்.

இதைச் சொல்லி அனுமனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

""ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச மஹாபல:

ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித:

தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன:

ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஜ:

ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்

ஸலாபிஸ்து ப்ரஹரத; பாத வைச்ச ஸஹஸ்ரஸ:

வெற்றி தரும் ஸ்லோகம்:

அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.

""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய

தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!

நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ

நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم