பிரசவ வலியால் துடிக்கிறது ஒரு பெண் யானை. அருகே மூத்த யானைகள் ஆதரவாக நிற்கின்றன. ஒரு யானை தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று வாலை தூக்கி பிடித்து குட்டியானை வெளிவர உதவுகிறது. மற்ற யானைகள் பெண் யானைக்கு ஆதரவாக நிற்கின்றன.குட்டியானை உலகை காண ஆவலோடு வெளி வருகின்றது.
இது போன்ற காட்சிகளை NATIONAL GEOGRAPHIC சேனலிலும்,DISCOVERY சேனலிலும் பார்த்து பரவசம் அடையும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவில்களில் நம் முன்னோர்கள் செதுக்கி வைத்துள்ளதை எப்பொழுது பார்த்து ரசிக்க போகிறோம்... எப்படி பாதுகாக்கப் போகிறோம்......
( கீழ்வேளுர் கேடிலியப்பர் ஆலயம்..)
إرسال تعليق