சங்கரரை நேரில்கண்ட ஸ்தபதி
கணபதி ஸ்தபதியின் தரிசன அனுபவம்
Courtesy;Shri Ramani
காஞ்சிப் பெரியவரை 1963-இல் முதன்முதலில் தரிசித்தேன்.
என்வாழ்வின் வழிகாட்டி உலகம் அறிந்த இரண்டு மகரிஷிகள்.
ஒருவர் காஞ்சி மஹரிஷி, மற்றவர் ரமண மஹரிஷி.
என்தந்தை 1957-முதல் சிற்பக் கல்லூரி முதல்வர்.
1960-இல் அவருக்கு திடீரென வாதநோய் கண்டது.
உடல்செயல் இழந்துவாய் பேசமுடியாமல் ஆங்கில மருத்துவத்தில் குணமில்லை.
என்னை வளர்த்ததிரு கம்பனடிப்பொடி கணேசன்சொன்ன ஆயுர்வேதமும் பயன்தரவில்லை சங்கரரை நேரில்கண்ட ஸ்தபதி
கணபதி ஸ்தபதியின் தரிசன அனுபவம்
Courtesy;Shri Ramani
காஞ்சிப் பெரியவரை 1963-இல் முதன்முதலில் தரிசித்தேன்.
என்வாழ்வின் வழிகாட்டி உலகம் அறிந்த இரண்டு மகரிஷிகள்.
ஒருவர் காஞ்சி மஹரிஷி, மற்றவர் ரமண மஹரிஷி.
என்தந்தை 1957-முதல் சிற்பக் கல்லூரி முதல்வர்.
1960-இல் அவருக்கு திடீரென வாதநோய் கண்டது.
உடல்செயல் இழந்துவாய் பேசமுடியாமல் ஆங்கில மருத்துவத்தில் குணமில்லை.
என்னை வளர்த்ததிரு கம்பனடிப்பொடி கணேசன்சொன்ன ஆயுர்வேதமும் பயன்தரவில்லை.
இப்படியொரு சமயத்தில் காஞ்சிப் பெரியவரைப் பார்க்கச் சென்றேன்.
அப்போது சுவாமிகள் இளையாற்றங் குடியில் முகாமிட் டிருந்தார்.
அந்தக் குக்கிராம் நான்சென்ற போது இரவுமணி ஒன்பதுக்குமேல்.
ஸ்தபதி உடல்நலிவு கேட்டு சுவாமிகள் உடனே வெளிவந்தார்,
தன்னைச் சூழ்ந்திருந்த செட்டிநாடு பக்தர் புரவலர்களிடம் இருந்து.
சிற்பக்கலை சொல்லிக் கொடுத்துக் கோவில்பல கட்டினார் தந்தை,
ஏனிந்த நிலைசுவாமி அவருக்கு என்றெல்லாம் அவரிடம் கேட்டேன்.
சுவாமிகளோ பதிலேதும் கூறாமல் என்னைப் பற்றி என்கல்வி
வேலை பற்றியே விசாரித்தது எனக்குக் கவலை யளித்தது.
தந்தைக்கு என்னாகுமோ உயிர்பிழைக்க மாட்டாரோ என்று அஞ்சினேன்.
திடீரென்று ’வா,என்னுடன்’ என்று சுவாமிகள் எழுந்து நடந்தார்.
வெகுதூரம் நடந்தவர் மூத்த சுவாமிகள் அதிஷ்டானம் வந்துநின்றார்.
’இங்கேயே இரு’வென்று கூறிவிட்டு உள்ளே சென்று மறைந்தார்.
இரவுமணி நடுநிசியைத் தாண்டிவிட வெகுநேரம் காத்திருந்தபின் வந்தார்.
’எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டபடி வெளிவந்தார்.
தண்டத்துடன் மட்டுமே சென்றவர் கையிலிரு தேங்காய் மூடிகள்.
வியப்புடன் நான்பார்க்கப் பிரகாரத்தின் மூலைசென்று தண்டத்துடன் நின்றார்.
தந்தை நிலைபற்றி விசாரித்துநான் சொன்னதெல்லாம் கவனமாகக் கேட்டார்.
’தந்தைக்கு வந்திருப்பது ப்ராரப்த கர்மாவால். நீஅமோக மாயிருப்பாய்’
என்றுகூறித் தேங்காய்கள் தந்து, மேலாளரைப் பார்த்துச்செல் என்றார்.
தந்தைபற்றி ஒன்றும் சொல்லாமால் என்னைமட்டும் திரும்பத் திரும்ப
’நீஅமோக மாயிருப்பாய்’ என்று சொன்னது எனக்குப் புரிந்தது.
தந்தைசில மாதங்கள் கழிந்த பின்னர் இறைவனடி சேர்ந்தார்.
நான்மட்டும் தனியாக இருளில் திரும்ப, வழிதெரியாமல் திகைத்தேன்.
திடீரென்று குடுமிவைத்த எட்டுவயதுச் சிறுவன் ஒருவன் தோன்றினான்.
’ஸ்தபதி என்பின்னே வாரும்’ என்றுசொல்லிக் கூட்டிச் சென்றான்.
’யாரிவன், பேய்பிசாசோ, அருகில் மயானம்’--பயந்தபடி பின்தொடர்ந்தேன்.
கோபுலுவின் ஆதிசங்கரர் ஓவியம்போல இருந்தது அவனுருவம்.
ஓவியப் பையனே நேரில் வந்தது போலிருக்க வியந்தேன்.
மேலாளர் அறையருகில் விட்டுவிட்டு ஏதோசொல்லி இருளில் மறைந்தான்.
வந்து வழிகாட்டிச் சென்றது சங்கரர்தான் என்றது உள்ளுணர்வு மேலாளர் தந்த பணத்தை வாங்கமனம் ஒப்பவில்லை எனக்கு.
’சுவாமிகள் உத்தரவு’ என்று சொல்ல வாங்கிக் கொண்டேன்.
பசியெடுக்க அங்கேயே இரவு ஒருமணிக்கு சுடச்சுட உணவிட்டனர்.
1965-இல் நடந்த வேதாகம சில்பவித்வத் சபாவில்
புகழ்பெற்ற அனுபவமிக்க ஸ்தபதிகள் பலபேர் இருந்த அவையில்
இளைஞனான என்னைப் பேசச் சொல்லி இளம்சிற்பக் கலஞர்களை
வளர்த்துவிட்ட காஞ்சிமஹா பெரியவருக்கு கோடிகோடி வணக்கங்கள்.
Post a Comment