தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் !

 

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் !
சித்திரை விஷு கனியை காண்பது எப்படி?
தமிழக மக்களின் பண்டிகைகளில் முக்கியமானது சித்திரை வருடப்பிறப்பு. இந்தச் சித்திரை திருநாளை சித்திரை கனி என்று அழைக்கிறோம். கனிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இந்தப் பருவத்தில் தான் முக்கனிகள் அதாவது மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகளும் அதிகமாகக் கிடைக்கின்றது.
சித்திரை கனிக்கு தேவையான பொருட்கள்..
 
பழங்களில் மா, பலா, வாழை ஆகிய மூன்றும் முக்கியமானவை. அதுமட்டுமின்றி ஆப்பிள், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, ஆகிய பழங்களையும் வைக்கலாம். 
 
முதலில் ஒரு புது கண்ணாடியை எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதைத் தங்க நகைகளால் அலங்கரிக்க வேண்டும். 
 
ஒரு சிறு தட்டில் கிடைக்கும் பூக்களை வைத்து அலங்கரிக்கவும். பின்னர், நாணயங்களைத் தட்டில் பரப்பி வைக்கலாம். மற்றொரு தட்டில் அரிசி, கல் உப்பு, பருப்பு, மஞ்சள் தூள் வெல்லம் என ஒற்றைப் படையில் 5 பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். நமக்கு இஷ்ட தெய்வ படத்தையும் வைக்கலாம். பூக்கள் பரப்பிய தட்டில் ஸ்வாமி புத்தகத்தை வைக்கலாம். 
 
நகை, பணம் இவற்றில் லட்சுமியையும், புத்தகத்தில் சரஸ்வதியையும், தீபத்தில் சக்தியையும் என முப்பெரும் தேவியரை பார்ப்பதாக ஐதீகம். ஒரு பெரிய தட்டில் வெற்றிலை, பழம், பாக்கு, வெள்ளி, தங்கம், மஞ்சள், குங்குமம், பணம் ஆகியவற்றை வைத்துக்கொள்ளலாம். 
 
முதல் நாள் இரவு இதையெல்லாம் அலங்கரித்து வைக்க வேண்டும். மறுநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து இதில் கண்விழிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களையும் எழுந்து இந்தக் காட்சியை காணச் செய்ய வேண்டும். இது தான் விஷுக்கனி காணுதல் ஆகும். 
 
அன்றைய தினம் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று நமக்கு இஷ்ட தெய்வத்தை வணங்கி வழிபடலாம். இவ்வாறு செய்வதினால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.
அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post