சில ஆண்டுகளுக்கு முன்பு

 

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெண்மணி தன் குடும் பத்தில் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைப் பற்றி பத்திரிகை ஒன்றில் எழுதி இருந்தார்.
 
“என் தாய்- தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம். என் பெற்றோருக்கு வரிசையாக ஐந்தும் பெண் குழந்தைகளாகவே பிறந்தனர்.
நான் ஐந்தாவது பெண். “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியா வான்’ என்பது பழமொழி. என் தந்தை ஆசிரியர். இவரால் ஐந்தையும் எப்படிக் கரையேற்ற முடியும் என்று உறவினர்கள் மட்டுமல்லாது, நண்பர்களும் கவலைப்பட்டார்கள். 
 
என் முதல் அக்காவுக்கு திருமண வயது வந்தது. யார் யாரோ வந்தார்கள்; போனார்கள். 
 
“அக்கா விற்கு அப்பா
எப்படித் திருமணம் நடத்தப் போகிறார்- பணம் வேண்டாமா’ என்று கவலைப்பட்டோம்.
 
திடீரென்று ஒருநாள், வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒருவர், நன்கு படித்து பெரிய வேலையிலிருக்கும் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தார்.
“அவ்வளவு வசதியும், பெரிய வேலையிலிருக்கும் பிள்ளைக்கு அதிக வரதட்சணையும், நகைகளும் கேட்க மாட்டார்களா- நம்மால் எப்படி முடியும்’ என்று நினைத்த போதே, பிள்ளையைப் பெற்ற தாயும் தந்தையும், “எங்களுக்கு நிறைய பணமும், நகைகளும் இருக்கு. வரதட்சணை எதுவும் வேண்டாம். உங்களால் முடிந்த அளவிற்கு திருமணத்தை நடத்தினால் போதும்’ என்றார்கள்.
 
எங்களுக்கோ வியப்பு. ஆனால் அந்த வரனே முடிந்தது.
இப்படியே ஒவ்வொருபெண் ணிற்கும் நல்ல இடமாய், பெரிய உத்தியோகத்திலிருக்கும் மாப்பிள்ளைகளே கிடைத்தார்கள். 
 
எனக்கும் அப்படியே அமைந்தது. இன்று ஐந்து பெண்களும் அமோகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட எழுபத்தைந்து வயதை எட்டிவிட்ட என் அப்பா விடம் நான், “இது எப்படியப்பா சாத்திய மாயிற்று’ என்று கேட்டேன். 
 
அவர் சொன்னார்: “நான், என்னுடைய பதினைந்தாவது வயதில் விஷ்ணு சஹஸ்த்ர நாமம் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். இதோ, எழுபது வயதிற்கு மேல் ஆகிவிட்டது. 
 
இன்றுவரை ஒருநாள்கூட சஹஸ்த்ர நாம பாராயணத்தை நான் நிறுத்தியதில்லை. உங்கள் ஐந்து பேருடைய கல்யாணத்தையும் அமோகமாக நடத்தியவன் இந்த வாத்தியார் இல்லையம்மா. சாக்ஷாத் அந்த எம்பெருமான் நாராயணனே நடத்தி வைத்தான்!’ என்றார்.
 
என்ன அற்புதம் பாருங்கள். ஓர் ஏழை ஆசிரியரின் ஐந்து பெண்களுக்கும் பெரிய இடத்திலிருந்து பிள்ளைகள் வந்து, அவர் களாகவே விரும்பி திருமணம் செய்து கொண்டு அமோக வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் உண்மையான இறை நம்பிக்கையே. 
 
அதனினும் பெரிய உண்மை விஷ்ணு சஹஸ்த்ர நாமத்தின் மகிமையே!
சுமார் 1,300 ஆண்டுகளுக்குமுன் அவதரித்த ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர் இளம் வயதிலேயே துறவு பூண்டு, பல அறநெறிகளை மக்களுக்கு போதித்து, அத்வைதம் என்னுமொரு சிறப்பான பேருண்மையைத் தோற்றுவித்தார்.
“ஜீவாத்மா வேறு- பரமாத்மா வேறு’ என்ப தல்ல அவர் கொள்கை. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே. அந்த பரமாத்மாவை உனக்குள்ளேயே காணலாம். அதனை அறிந்து வாழ்வதுதான் அத்வைத தத்துவம். கணக்கற்ற துறவிகள் அவருடைய சீடரானார் கள். 
 
ஆதிசங்கர பகவத்பாதரும் ஒரு ஸஹஸ்த்ர நாமத்தை எழுதினார். அது அம்பாளைப் பற்றியது. ஆயிரம் திருநாமங்களுடைய அம்பாளைத் துதிக்கும் அந்த ஸ்லோகத்திற்கு “லலிதா சஹஸ்த்ர நாமம்’ எனப் பெயரிட்டார்.
உமா மகேஸ்வரியின் அண்ணனான ஸ்ரீவிஷ்ணு விற்கு எப்படி சஹஸ்த்ர நாமம்
உண்டாயிற்றோ அதைப்போல அம்பிகையையும் ஆயிரம் நாமங்களோடு துதித்தார் சங்கரர்.
 
ஒருநாள் காலை, ஒரு சந்நியாசிக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்துவிட்டு, ஆசிரம வாயிலிலுள்ள திண்ணையில் உட்கார்ந்தார் சங்கரர்.
அப்போது பண்டிதர்கள் முதல் பாமரர் வரை படித்துப் பயன்பெறும் படி லலிதா சஹஸ்த்ர நாமத்திற்கு விரிவுரை எழுதவேண்டும் என்று நினைத்தார். உடனே தன் சீடர்களுள் ஒருவனைஅழைத்தார்.சீடன் சங்கரரை வணங்கி நின்றான்.
”சிஷ்யனே, பூஜையறையில் லலிதா சஹஸ்த்ர நாம ஓலைச் சுவடி இருக்கும்.
அதை எடுத்து வா” என்றார். 
 
உள்ளே சென்ற சீடன் ஓலைச் சுவடிகளுக்கிடையே லலிதா சஹஸ்த்ர நாமத்தை தேடி எடுத்து சங்கரரிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த சங்கரர், ”சீடனே… நான் உன்னைக் கேட்டது லலிதா சஹஸ்த்ர நாமம். ஆனால் நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்… நன்றாகப் பார்…” என்றார்.
சீடன் படித்துப் பார்த்த போது “விஷ்ணு சஹஸ்த்ர நாமம்’ என்றிருந்தது. மன்னிப்புக் கேட்ட சீடன், மறுபடியும் உள்ளே சென்று தேடி லலிதா சஹஸ்த்ர நாம சுவடிகளைக் கொண்டு வந்து கொடுத்தான்.
 
“”உனக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க வில்லையா? நான் கேட்டதைக் கொண்டு வராமல் மறுபடியும் விஷ்ணு சஹஸ்த்ர நாமத்தையே கொண்டு வருகிறாயே?” என்று கடிந்து கொண்டார் சங்கரர்.
அதற்கு அவன் சொன்னான்:
 
“”சுவாமி, நான் தாங்கள் இயற்றிய லலிதா சஹஸ்த்ர நாமத்தைத்தான் எடுத்தேன். ஆனால் ஒரு சிறுமி, மறுபடியும் மறுபடியும் என் கையில் இதைக் கொடுத்து அவரிடம் கொடு என்று கட்டளை இடுகிறாள். பார்த்தால் விஷ்ணு சஹஸ்த்ர நாமம். நான் என்ன செய்வது? தவறு என் மீதல்ல. அந்தச் சிறுமியின் விஷமம் இது…”
 
வியப்படைந்த ஆதிசங்கரர் ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தார். தன் சீடனுடைய கையில் லலிதா சஹஸ்த்ர நாமத்திற்கு பதிலாக விஷ்ணு சஹஸ்த்ர நாமத்தைக் கொடுத்து, “இதற்கு உரை எழுதச் சொல்’ என்றது அந்த அம்பாளே என்பதை அறிந்து மகிழ்ந்தார். 
 
அம்பாள் தன்னுடைய சீடனுக்கு காட்சியளித்த தைத் கண்டு மகிழ்ந்தாலும், தனக்கு அவள் தரிசனம் தரவில்லையே என்று வருந்தினார். 
 
இருப்பினும் அம்பாளுடைய கட்டளைக்கேற்ப விஷ்ணு சஹஸ்த்ர நாமத்திற்கு உரை எழுதி, அது இன்றளவும் பகவத்பாதருடைய பெருமையைப் பேசுகிறது.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم