ஜீவ சமாதி என்றால் என்ன

 


ஜீவ சமாதி

என்றால் என்ன?

சிந்தனை தெளிவு.

ஜீவ சமாதி என்றால் என்னவோ 

ஏதோ என்று நினைக்காதீர்கள்.

சில மகான்கள் தங்கள் உடல் கெடாதவாறு விந்துவை உடலிலேயே இருக்கும்படி செய்து, தன் அறிவை உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இணையும் படி செய்து, தங்கள் உடலைச் சுற்றி நல்ல ஒரு காந்த களத்தை உருவாக்கி விடுவார்கள்.

அந்த காந்த களத்தில் நாம் நுழையும் போது நம் ஜீவகாந்தம் அந்த மகானின் உயர் காந்த உணர்வுகளோடு கலக்கும் போது, நமது சிந்தனை தளம் உயர வாய்ப்புண்டு. வேண்டாத எண்ணங்கள் நீங்கி, நாம் வாழ்வில் உயர நாம் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நமக்கு கிட்டும்.

சுருக்கமாக, நமது குறைபாடுகளை நீக்கி நமக்கு வளமான வாழ்வை, நமதுவினை பதிவுகளுக்கேற்ப, சீரமைக்க உதவும். அவ்வளவுதான்.

அங்கே போய் தியானம் செய்து அந்த உணர்வோடு கலந்து தன்னை மறக்கவேண்டும், தளம் மாற வேண்டும் என்று ஏதேதோ புரியாத வகையில் சொல்கிறார்களே? என்று சிலர் கூறுவார்கள்.

தியானம் என்றால் என்னவோ ஏதோ 

என்று குழப்பிக் கொள்ளாதீர்கள்.

ஒரு செயலை முழுமனதுடன், சிந்தனை சிதறாமல் நீங்கள் செய்தால் அதுவே தியானம்தான்.

One thing at one will என்று 

மகரிஷி கூறுவார்.

ஜீவசமாதியில, உங்கள் கவனம் முழுவதும், அந்த மகானின் உயர் சிந்தனைகளோடு உங்கள் உணர்வுகளும் கலக்க வேண்டும் என்று இருந்தால் போதும்.

பிரபஞ்ச பேராற்றலும் உங்களோடு இணைந்து உங்களுக்குள் என்ன மாற்றம் தேவையோ அது இயல்பாக நடந்து விடும். அவ்வளவுதான். போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். 

எந்த சிறப்பான கோயிலுக்கு போனாலும் சித்தர் பீடம் இருக்கும். விசாரித்து அங்கே போய், அமைதியாக இயல்பாக உங்கள் கவனத்தை அங்கேயே நிலை நிறுத்துங்கள். மற்றவை தானாக நடக்கும்.

இன்னும் ஒரு சிறு விளக்கம்,,,

ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம்+ஆதி.

அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்து வந்த ஜீவனை சமன் செய்தல் என்று பொருள்.

ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறிமுறைகளையும் தனது இரு கண்களினும் மேலாக பின்பற்றி வருகின்றனர்.

உடலையும் உள்ளத்தையும் மாசின்றி பேணி காக்கின்றனர்.

அலைமோதும் ஜீவனை ஒரு நிலைப்படுத்தி தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர் கலை.

தன்னை அறிய தனக்கொரு கேடில்லை என்கிறார் திருமூலர்.

கடவுளை காண முயன்று கொண்டிருப்பவர்கள் பக்தர்கள்.

ஆனால் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.

யோகி என்றால் சமஸ்கிருத்தில் வழி என்று பொருள்.

இறைவனைக் காணும் வழியைக் கண்டவனே யோகி.

இறைவனைப் பற்றிய சிந்தனையுடன் சின் அல்லது ஆதி போன்ற முத்திரையில் யோகி அமரும் ஆசிரமம்தான் "யோகாஸ்ரமம்" எனவும் கூறுகின்றனர்.

சமாதியடைவது என்பது முடிவு பெறும் 

ஒரு நிலையே அல்ல.

ஞானிகள் தங்களுடைய ஆற்றலும் அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்து விட்டு இறைவனோடு இரண்டறக் கலக்கின்றனர்.

சமாதி நிலையில் இருப்பதும் யோக நெறியின் உச்ச நிலை என உரைக்கப்படுகிறது.

இவர்களின் உடல் மன இயக்கம் மட்டுமே நின்று போயிருக்குமே தவிர உயிர் உடலை விட்டு பிரிவதில்லை என்கிறார் திருமூலர்.

இதை பதிவாக எளிமையாக போடுவதற்கு காரணம் எந்த புகழ் பெற்ற கோவிலுக்கு சென்றாலும் ஜீவசமாதி விசாரித்தறிந்து அங்கு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து நமது எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இந்த எண்ண உயர்வுக்கு  நீங்கள் பெரிய தவ ஆற்றல் மிக்கவராகவோ, சித்தர்கள் போன்ற உணர்வு தளமோ தேவையில்லை. 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post