சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடும் ஆடல்வல்லானின் மஹாத்மியம்:

 

 
 கருணைக்கடலாய் விளங்கும் பரமசிவம்,சகல பிராணிகளும் பிறப்பிறப்பாம் பெருங்கடலினின்று கரையேறி நித்தியானந்தப் பெருவாழ் வெய்தும் பொருட்டு இத்தலத்தில் கனகசபையில் முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் தில்லை மூவாயிர முனிவர்களும் புடை சூழப் பற்பல வாத்தியங்கள் அனுசரித்து முழங்க ஸ்ரீ நடராஜ கோலத்தோடு ஸ்ரீ பதஞ்சலி,ஸ்ரீ வியாக்கிரபாதர்,ஹிரண்யவர்மன் இவர்கள் மிகக் களிப்புடன் தரிசிக்க ஆனந்த தாண்டவம் புரிந்து அருளினார் என்பதேயாகும்.

இவ்விஷயம் ஸுதஸம்ஹிதை, முக்திகண்டம் எட்டாவது அத்தியாயம் முழுமையிலும் வெகு விஸ்தாரமாய்க் கூறப்பட்டுள்ளது.அன்றியும் அதிலேயே ஒன்பதாவது அத்தியாயத்தில் ஆனந்த தாண்டவ தரிசனமே முக்திக்குச் சுலபமான உபாயமென்றுங் கூறுகின்றது.சம்சார ஸாஹரத்தினின்றும்கரையேறி நித்தியானந்தப் பெருவாழ்வெய்த வேண்டுமென்னும் தீவிரதர இச்சையுடைய ஆன்மாக்கள் மேற்படி அத்தியாயங்களை நன்கு உணர்தல் அவசியம்.

- 'சிதம்பர ரகசியமும் நடராஜ தத்துவமும்' என்னும் நூலில் இருந்து...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post