குறையொன்றுமில்லை கோவிந்தா


  🌿 குறையொன்றுமில்லை கோவிந்தா 🌿

🍒குறையொன்றுமில்லை 

ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாசாரியார் 

🍊 விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு நாமத்துலேயும் நால்  வேத மந்திரங்களும் அடங்கியிருக்கு.  

அதனாலே அதைப் பாராயணம் பண்ணினால் வேத பாராயணம் பண்ணின பலன் என்று சொன்னேன். 

அதிலும் ராம நாமத்துக்குத் தனியொரு சக்தி. ராம நாமத்துக்கு எப்படி அதன் சக்தி வருகிறது?  

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

காயத்ரி மந்திரத்தின் பொருளை ராமாவதாரத்தின் போது பகவான் நடித்துக் காடியதாலே.  

அதனால்தான் வால்மீகி, ராமாயணத்தில் ஆயிரம் சுலோகத்துக்கு ஒரு தடவை காயத்ரியின் ஒரு அக்ஷரத்தை வைத்தார்  

மொத்தம் 24,000 சுலோகம் ராமாயணத்தை பாராயணம் பண்ணினா காயத்ரியைப் பாராயணம் பண்ணின பலன் கிடைக்கும்.

காயத்ரி மந்திரம் எல்ல மந்திரங்களுக்கும் தாய்.

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

🍅 ஒருமுறை தேவாசுர யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, தேவர்களுக்கே நித்திய ஜெயம் உண்டாகிக் கொண்டிருந்தது.  

33வது நாள் அந்த தேவதைகள் படுதோல்வி அடைந்தார்கள். 

இன்றைக்கு நாம் ஏன் தோற்றோம்? என்று ஆராய்ச்சி பண்ணினார்கள்.  

காயத்ரியை ஜபிக்காமல் சென்றதால் என்று பதில் கிடைத்தது.  

ஜெயம் வந்தபோது மந்திரத்தை மறந்ததால் தோல்வி உண்டாயிற்று.  

மனுஷ சுபாவமே அதுதான்  

சரீரத்தைக் கொடுத்த பகவானை மறந்து, உடம்பு தளர்ந்து போகிறபோது மட்டுமே அவனை நினக்கிறோம். 

🙏  அதனால் தான் குந்தி தேவி ஒரு வித்தியாசமான வரத்தைக் கண்ணனிடம் கேட்டாள்.   

வாழ்க்கையிலே விபத்துக்களை உண்டு பண்ணச் சொல்லி வரம் கேட்டாள்.   

ஏன் இப்படி கேட்கிறாய் என்றான் பரமாத்மா. 

அப்போதுதானே உன் நினைவு சதா மனத்திலே இருக்கும் என்றாளாம் குந்தி தேவி.

 அதைப் போல தோல்வி வந்தபோதுதான் காயத்ரியை மறந்தோம் என்று உணர்ந்தார்கள் தேவர்கள்.  

கடைசியில் அவள் இருந்த இடத்தைத் தேடி அலைந்து போய்க் கண்டுபிடித்து ஸ்தோத்திரம் பண்ணினார்கள்.  

ஸ்தோத்திரம் பண்ணப்பட்டவுடன் காயத்ரி, தேவர்களின் பக்கம் திரும்பினாளாம்.  

ஸ்தோத்திரத்தின் மகிமையைப் பாருங்கள்.  

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

🌹 விஷ்ணு சஹஸ்ரநாமம் கூட, ஸ்தோத்தரிக்கத் தகுந்தவன் பரமாத்மா: ஸ்தோத்திரப் பிரியன் அவன் என்கிறது.

அப்படியிருக்கிறது ஒரு பெருமையா என்று கேட்டால், அப்படியிருப்பதும் அவன் கருணை தான் என்று சொல்லணும்.  

நமது ஸ்தோத்திரம் அவன் பிரபாவத்தை முழுதும் சொல்ல முடியுமா?  

ஏதோ கொஞ்சம் சொல்லலாம்.  

அவனிடம் இருப்பதையும் இல்லாததையும் நம்மாலே முழுதும் சொல்லி ஸ்தோத்திரம் பண்ண முடியாது.  

🌹 நாம் ஸ்தோத்திரம் பண்ணும் போது பகவான் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டால் என்ன செய்ய முடியும்?  

அப்படிச் செய்யாமல் ஸ்தோத்திரப் பிரியனாக இருந்து நமக்கு அருள் செய்வதே அவன் கருணை. 

🌹 பகவான் ஸ்தோத்திரப் பிரியனாக இருப்பதாலே தான் அவனிடமிருந்து தோன்றிய நாமும் ஸ்தோத்திரப் பிரியர்களாக இருக்கிறோம்  

🌹 மண்ணின் குணம் அதைக் கொண்டு செய்யப்படும் பானைக்கு வருகிற மாதிரி. காரணத்தின் குணம், அதன் பயனான காரியத்துக்கும் வரும்.

ஆக, வேதமந்திரங்கள் எல்லாமே ஸ்தோத்திரம்,  துதி பாடுவதால்தான். 

ஸ்தோத்திரம் செய்த தேவர்களின் பக்கம் காயத்ரி வந்தாள். அவர்களுக்கு வெற்றி உண்டாயிற்று.  

🌹 அப்படிப்பட்ட காயத்ரி, தேவர்களுக்கே அனுக்கிரஹம் செய்தாள்  என்றால் அந்த அருள் மேலும் தேவையான நமக்கு எத்தனை செய்வாள்.  

🌹 அந்த காயத்ரியை தேவர்கள் எப்படித் துதித்தார்கள் என்றால், "விச்வமஸி, விச்வாயு" என்று ஆரம்பித்துத் துதித்தார்கள். 

அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் நாமமாக இருக்கிறது. 

விச்வம் என்பதன் விரிவான பொருள் என்ன?  

 பகவானுடைய மூச்சுக்காற்றாக விளங்கக் கூடியது வேதம். 

🌹அதன் மந்த்ரார்த்தத்தைக் கேட்டோமானால் விஷேசமான பலன் கிடைக்கும்.  

🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊

🌕 திருவேங்கட மலையைப் பற்றி சுவாமி தேசிகன் சொல்கிறார்.  

வேங்கட வெற்பென விளங்கும் வேத வெற்பே வேதமே பர்வத (மலை) ரூபத்திலே அமைந்திருக்கிறது.

  "வேம்" என்றால் "மகா பாவம்" என்று பொருள்.

  "கடையத்தி" என்றால் "பொசுக்குதல்". 

 நமது மகா பாவங்களை நெருப்பிலே பொசுக்கி விடக்கூடிய ஆற்றல் திருவேங்கட மலைக்கு இருக்கிறது. 

🌕 வேதங்களிலே ஏழு காண்டம் உண்டு.  திருவேங்கடத்தில் ஏழு மலை.  

அந்த வேதங்களால் தாங்கப்பட்டு நிற்கிறான் திருவேங்கடமுடையான்.  

மலை வடிவிலே வேதம் இருக்கு என்று சொன்னால் புரியவில்லையே என்று கேட்கலாம்.  

வேதத்தைப் பாராயணம் பண்ணினால் முழுமையாகப் புரிகிறதா?

 புரியாவிட்டாலும் உயர்த்தியான பாவம் எற்படுகிறதோயில்லையோ, நம்முடைய அந்த பாவத்தை உணர்ந்து பரமாத்மா மேலும் மேலும் புரியும்படியாகப் பண்ணுகிறான்.  

🌕 வேத வடிவிலே மலை இருக்கிற மாதிரி, சப்த வடிவிலே பரமாத்மா இருக்கிறான்.  

அதனால்தான் வேதாந்த விசாரத்திலே கருத்து வேறுபாடு கொண்ட தர்ம தாசார்யர்கள் கூட (சங்கரர், ராமானுஜர், மாத்வாச்சர்யர்) "வேதம் நித்தியமாய்" இருக்கக்கூடியது என்று ஒப்புக் கொண்டார்கள். 

🌕 பிரளய காலத்தில் கூட வேதம் அழிவதில்லை.  

அதைத் தாங்கிக்கொண்டு வெளியே விடுகிறான் பரமாத்மா. 

வேத கோஷத்தின் உயர்ந்த சப்தத்துக்கு பிரும்ம கோஷம் என்று பெயர்.

🍒 "சமே, சமே" என்ற ஒலி மீண்டும் மீண்டும் ஒலிக்கக் கேட்கலாம். 

🍒  "சமே" என்றால், அது எனக்கு உண்டாகட்டும் என்று அர்த்தம்.  

பகவானிடத்திலே என்ன கேட்க வேண்டும் என்பதைக் கூட வேதம் நமக்குச் சொல்லித் தருகிறது. 

 நாமாக கேட்டால் அல்பமான விஷயத்தைத்தான் கேட்போம். 

🍒 இந்திரனுடைய தாயாரான அதிதி சொல்கிறாள் - கற்பக விருஷத்திடம் போய் கௌபீனம் கேட்டாற் போலே" என்று.  

அப்படியல்லாமல், மங்களம் கீர்த்தி, ஷேமம் எல்லாம் உண்டாகட்டும் என்று வேதம் கேட்கிறது. 

🍒 விச்வம் சமே என்பதும் கோரிக்கைகளும் ஒன்று.  விச்வத்தை எனக்கு கொடு என்று கேட்டால் உலகம் மொத்தமும் கிடைக்குமா? 

 அது பெருங்கோரிக்கை இல்லையா? 

இந்த கோரிக்கைக்கு என்ன வியாக்யானம் பண்ணுகிறார்கள் என்றால், விச்வ சப்தத்துக்கு பகவான் என்று அர்த்தம்.  

🍒 விச்வம் என்றால் பகவான்.  

சஹஸ்ர நாமத்திலே முதல் சப்தம் விச்வம். 

அந்த சப்த்ததினாலே பரமாத்மா சொல்லப்படுகிறான்.  

அவனையே நாம் அடைய வேண்டும் என்பது கோரிக்கை.  அந்த பரப்ரும்மத்தையே நாம் அடைய வேண்டும்.  

🍒 அந்த பரமாத்மாவை, வா, வா - வந்து என்னை ரக்ஷி என்று பிரார்த்திப்பதுதான் விச்வம் சமே.  சுவாமி, நீ வரமாட்டாயா? சீக்கிரமாக வரமாட்டாயா?  காலம் குறுகாதா? என்று நெக்குருகி ஒருவர் உபன்யாசம் பண்ணுகிறார்.

🦅 பகவான் கருடாரூடராய் வந்து இப்பவே வா, கருடனில் ஏறிக் கொண்டு போகலாம் என்று அழைத்தால் போக முடியுமா?  

அவனே வந்து  கூப்பிட்டாலும் போவதற்கு எத்தனை பேர் சித்தம்?

ஆகையினாலே பிரபுவினிடத்திலே என்ன சொல்ல வேண்டும்?  நான் கூப்பிட்டால் நீ வந்துவிடுவாய்.  ஆனால், நீ கூப்பிட்டால் நான் வருவேனா? 

🦅  ஒன்று செய்.  இந்த சரீரம் கீழே விழுகிற வரையிலே அதிலே இருந்து கொள்கிறேன். 

அதற்குப் பிறகு இன்னொரு சரீரத்தைக் கொடுத்து விடாதே என்று பிரார்த்திக்கணும்.

அதற்கும் அவன் சித்தமாயிருக்கிறான் எண்ணும்போது, அவன் தயையை  என்னவென்று சொல்வது.  

🍊 பகவான் தயையைக் குறித்து தயா சதகம் என்றே பாடியிருக்கிறார் சுவாமி தேசிகன்.   

எத்தனையோ குணமிருந்தாலும் தயைகுணம் இல்லாமல் பிரகாசிக்காது.  

அம்மா தாயே, நீ பகவானிடத்தில் இல்லை யென்றால் மற்றைய குணங்களெல்லாம் அவனுக்கு தோஷமாகுமே ஒழிய குணங்களாக என்கிறார்.  

🍊 நாம் அழைத்ததும் தயையினாலே ஓடி வருகிறவனைப் பார்த்து இப்போது நான் சித்தமாக இல்லை; அப்புறம் என்னை அழைத்துப் போ என்று சொன்னால் அதற்கும் அவன் தயார்.   

🍊 இப்படிப்பட்ட தயாளனான பரமாத்மா நமக்குக் கிடைப்பது விச்வ சப்தத்தினாலே.. 

விச்வ சப்தத்தை தியானம் பண்ணினால், ஓம் விச்வஸ்மை நம: ஓம் விச்வாய நம: என்று அதைச் சொல்லி அர்ச்சனை பண்னினால், அவன் தயை இல்லாமல் போகுமா, கிருபை கிடைக்காமல் போகுமா?

🍊 விச்வம் என்கிற சப்தத்துக்குப் பூரணத்துவம் என்றும் ஒரு பொருள் உண்டு.  

பகவான் எதிலும் குறைவில்லாதவன் என்று அர்த்தம்.  அதனால்தான் பூரணன், கொள்ளக் குறைவிலன் என்றெல்லாம் அவனைப் பாடியிருக்கிறார்கள்  

🍊 சுவாமி தேசிகன் சொல்கிறார்: தனதனைத்தும் அவர்தமக்கும் வழங்கியும் தான் மிக்க விளங்கக் கூடியவன் பரமாத்மா.  

கொடுத்ததினாலே அவனிடத்திலே குறைவில்லை. 

🍊 பகவான் கொள்ளக் கொள்ளக் குறைவிலன்.  கொள்ளமாளா இன்பவெள்ளம் அவன் என்கிறார் ஆழ்வார்.  

கொடுக்கக் கொடுக்கக் அவனிடத்திலே விருத்தியாகிக் கொண்டேயிருக்கிறது.  

அதனால் அவன் பூரணன் ஆகிறான்.

எல்லாம் அவனிடத்தில் இருக்கிறது என்றால் அவனுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்?  

தேங்காயை அவனிடத்தில் சமர்ப்பிக்கிறோம்.  அவனிடத்திலே தேங்காய் இல்லையா? 

புஷ்பத்தை சமர்ப்பிக்கிறோம்.  அவனிடத்திலே புஷ்பம் இல்லையா?  

இந்த கேள்விகளுக்கான பதில் ஒரு அழகான கதையிலே அடங்கியிருக்கிறது -🙏

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post